கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். நாளை பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் கோயம்புத்தூர் வந்து கோவில்களில் தரிசனம் செய்யவும், தமிழக அரசியல் நிலை குறித்து நடைபெறும் மையக்குழு கூட்டத்திலும் கலந்துகொள்ள உள்ளார். அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், ஜனநாயகன் படத்திற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது, நடிகர் விஜயை நோக்கி நகர்வதைக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.