இந்திரா நகரைச் சேர்ந்த அஸ்கர் அலி, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்துக்காக காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்படுவதாக தகவல் பரவியதை அடுத்து, தமுமுகவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அங்கு கூடியிருந்தவர்கள், அஸ்கர் அலி அல்லாஹ் ஒருவர் மட்டுமே என்ற பெயரில் வாட்ஸ்அப்பில் குழு வைத்திருந்ததாகவும், அவர் மீது எந்தவித குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர், அஸ்கர் அலியிடம் விசாரணை மட்டுமே நடைபெற்று வருவதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து தமுமுகவினர் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் செல்வபுரம் காவல் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.