இரவில் கடும் குளிர் வாட்டி எடுத்த நிலையில், அதிகாலையில் வதம்பச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மிகவும் அவதிப்பட்டனர். கடந்த சில நாட்களாகவே கோவையில் இதுபோன்ற பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு ரூ.3000 ரொக்கம்.. டோக்கன் குறித்து முக்கிய அப்டேட்