இவர்கள் பெங்களூரில் இருந்து மொத்தமாக மெத்தாபெட்டமைனை வாங்கி வந்து கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூபாய் ஆறு லட்சம் மதிப்பிலான 195 கிராம் மெத்தாபெட்டமைன், போதைப்பொருள் பயன்படுத்தும் உபகரணங்கள், ரூபாய் 15,000 மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் மீது ஏற்கனவே விசாகப்பட்டினம் மற்றும் கோவையில் கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!