அன்னூர் அருகே சொத்து பிரச்சனை காரணமாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில், மகன் ராஜசேகர் (35) தனது தந்தை விஸ்வநாதனை (61) நேற்று முன்தினம் (மார்ச் 1) காரால் மோதி பின்னர் கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது தொடர்பாக அன்னூர் போலீசார் வழக்குப்பதிந்து ராஜசேகரை கைது செய்துள்ளனர்.