கோவை: கோயம்புத்தூர் விழா வீதியில் உற்சாக கலைவிழா

கோயம்புத்தூர் விழாவை முன்னிட்டு காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் நேற்று நடைபெற்ற விழா வீதி நிகழ்ச்சியில் வள்ளிக்கும்மி ஆட்டம், உருமி ஆட்டம், பொய்கால் குதிரை, ஒயிலாட்டம், பறையிசை, ஜமாப் இசை உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்களால் நடத்தப்பட்டன. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் பங்கேற்று மகிழ்ந்தனர். கலைஞர்களுடன் பொதுமக்கள் புகைப்படம் எடுத்து பாராட்டினர். இந்த நிகழ்விற்காக காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி