கோவை: மூதாட்டி மீது கார் மோதி மரணம்... சிசிடிவி வைரல்

கோவில்பாளையம் அருகே அதிவேகமாக வந்த கார் மூதாட்டி மீது மோதியுள்ள விபத்து, சிசிடிவி காட்சிகளுடன் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பாளையம், வி.ஐ.பி. கார்டனைச் சேர்ந்த அழகர்சாமியின் மனைவி சசிகலா (75), நேற்றுமுன்தினம் சத்தி சாலையில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத ஒரு கார் அதிவேகமாக வந்து மோதியது. 

இதில் தூக்கி வீசப்பட்ட சசிகலா சாலையோர பள்ளத்தில் விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. 

இந்த சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டியவரை அடையாளம் காணும் பணியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. இதனால் பொதுமக்களில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி