கோவை: சம்மதமின்றி மகளின் உடல் எரிப்பு - சிறுமியின் தாய்

கோவை சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுமியின் தாய் பவித்ரா செய்தியாளர்களை சந்தித்து பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தனது சம்மதமின்றி குழந்தையின் உடல் வாங்கப்பட்டு அவசரமாக எரிக்கப்பட்டதாகவும், இதனால் உண்மை குற்றவாளியை கண்டறிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். கணவர் மீது சந்தேகம் இருப்பதாகவும், தனக்கு நிதி வேண்டாம் நீதி வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், வழக்கை திசைதிருப்ப தன்னை குறித்து அவதூறு பரப்பப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

தொடர்புடைய செய்தி