கோவை: அரசுப் பேருந்தில் மாணவர்கள் நடத்தை குறித்து சர்ச்சை

கோயம்புத்தூரில் அரசு பேருந்தில் கல்லூரி மாணவி ஒருவர் மாணவர் மடியில் அமர்ந்து செல்ஃபி எடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்கடத்தில் இருந்து சூலூர் நோக்கிச் சென்ற பேருந்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பயணிகளின் அதிருப்தியைத் தொடர்ந்து, சம்பவத்தை ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. பொதுப் போக்குவரத்தில் நாகரீகம் கடைபிடிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி