கோவை: தேர்வில் தோல்வி; கல்லூரி மாணவி தற்கொலை

கோவை கணபதியைச் சேர்ந்த கண் கண்ணாடி கடை உரிமையாளர் டேவிட் என்பவரின் மகள் மெர்லின் (20) நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். 4-ம் ஆண்டு கல்லூரி மாணவியான மெர்லினை, அவரது தந்தை டேவிட் மற்றும் உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மெர்லின் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சரவணம்பட்டி காவல்துறையினர், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெறாததால் மெர்லின் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததும், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த மன உளைச்சலே அவரது தற்கொலைக்குக் காரணம் என காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி