கடந்த சில மாதங்களாக 500-க்கும் மேற்பட்ட லாரிகளில், பவுண்டரிகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுகள், பாசன கிணற்றில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் விவசாய நிலங்கள், நீரோடைகள், கால்நடைகள், குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் மாசடைந்து சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஊராட்சி அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இதற்குப் பிறகு கழிவுகள் கொட்டப்படமாட்டோம் என உறுதி அளிக்கப்பட்டதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
ஆனால் மீண்டும் கடந்த சில வாரங்களாக 2 ஏக்கர் பகுதியில் 4 அடி உயரம் வரை கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் நேற்று முறையிட்டுள்ளனர்.