கோவை: வீட்டின் கதவை உடைத்து திருட்டு

கோவை கவுண்டம்பாளையம் சரவணாநகர் பகுதியில் வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் ரொக்கம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயராமன் (வயது 75) என்பவர், சென்னையில் உள்ள தனது உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தார். நிகழ்விற்குப் பிறகு அவர் வீடு திரும்பியபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

உடனே உள்ளே சென்று பார்வையிட்டபோது, வீட்டில் உள்ள பீரோ திறக்கப்பட்டு, அதிலிருந்த துணிகள் மற்றும் பொருட்கள் சிதறியிருந்தன. மேலும், பீரோவில் இருந்த 1½ பவுன் தங்க நகை மற்றும் ரூ. 20,000 ரொக்கம் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து ஜெயராமன் அளித்த புகாரின் பேரில் கவுண்டம்பாளையம் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து, மர்மநபர்களை கண்டறிய விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி