கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் மோப்ப நாய் அணி மற்றும் வெடிகுண்டு விசாரணைப் பிரிவு அலுவலகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். சமீபத்தில் கோவை மண்டலப் பாஸ்போர்ட் அலுவலகம், விமான நிலையம், நீதிமன்றம் மற்றும் டவுன்ஹால் மணிக்கூண்டு பகுதிகளுக்கும் இதே போன்ற மிரட்டல்கள் வந்துள்ளன. மிரட்டல் விடுத்த நபரை கண்டறிய காவல்துறையின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.