கோவை துடியலூர் அருகே வட்டமலைபாளையம் பகுதியில், தனியார் கல்லூரிக்கு அருகில் உள்ள காலி இடத்தில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் எரிந்த நிலையில் நேற்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். துடியலூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவப்பு நிற உடை அணிந்திருந்த அந்த இளம்பெண்ணின் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.