கோவை: தவறவிட்ட நகையை உரிமையாளரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்

கோவை கணபதி பாரதி நகரைச் சேர்ந்த கௌசல்யா சீனிவாசன் தனது குடும்பத்துடன் சென்ற ஆட்டோவில் ஒரு பவுன் தங்கப் பிரேஸ்லெட்டை தவறவிட்டார். ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன், வாகனத்தை சுத்தம் செய்யும் போது பிரேஸ்லெட்டை கண்டெடுத்து, பேராசைப்படாமல் உடனடியாக உரிமையாளரின் வீட்டிற்கே சென்று பத்திரமாக ஒப்படைத்தார். அவரது இந்த நேர்மையான செயலைப் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி