கோவை: சொத்து ஆக்கிரமிப்பு முயற்சி; பெண்ணுக்கு கொலை மிரட்டல்

கோவை தெலுங்குபாளையத்தைச் சேர்ந்த திவ்யா (35) என்பவர், தனது சொத்தை ஆக்கிரமிக்க முயற்சித்து, சிலர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். 

அவரது தந்தையின் வளர்ப்பு தாய் பழனியம்மாளுக்குச் சொந்தமான குமாரபாளையம் பகுதியில் உள்ள 36 செண்ட் நிலத்தை, தீபா விஸ்வநாதன் உள்ளிட்டோர் JCB, டிராக்டர், அருவாள் போன்ற ஆயுதங்களுடன் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி ஆக்கிரமிக்க முயன்றதாகவும், தன்னை கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டியதாகவும் புகாரில் கூறியுள்ளார். 

முன்னதாகவே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், தனது உயிரும் சொத்தும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் திவ்யா நேற்று கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி