ஆகாஷ் தீப்பை கடத்தி கொலை செய்ய சாந்தி வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் உத்தரவிட்ட வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடத்தல் சம்பவத்திற்குப் பிறகு, ஆகாஷ் தீப் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு சென்றுவிட்டார். அரவிந்த் குமாரின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், தனது சொத்துக்களை மோசடியாக விற்க முயற்சி நடப்பதாகவும் ஆகாஷ் தீப் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாந்தி மற்றும் அவரது கூட்டாளிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகியிருக்கும் WhatsApp வீடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.