கடந்த 8-ம் தேதி, நாய் ஒன்று வணிக வளாகத்தின் இரண்டாவது மாடியில் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த ஊழியர்கள் நாயை பிடித்து தூக்கி கீழே வீசியுள்ளனர். இதில் படுகாயமடைந்த நாய்க்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கௌதம் என்பவர் நாயை மீட்டு தனியார் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கு நாயை பரிசோதனை செய்த மருத்துவர்கள், நாய்க்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்தனர். தற்போது நாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கௌதம் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். புகாரில், நாயை தூக்கி வீசிய ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாயில்லா ஜீவனை கொடுரமாக நடத்திய ஊழியர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.