இது தொடர்பாக ஆந்திராவைச் சேர்ந்த சிவப்பிரகாஷ் (வயது 35) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவை ஹவாலா பணம் என்பதும், கொச்சிக்கு கொண்டு செல்லப்படுவதும் தெரியவந்தது. இதையடுத்து, பணத்தையும், சிவப்பிரகாஷையும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, யாருக்காக கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.