கோவை தொப்பம்பட்டி பிரிவு பேருந்து நிறுத்தம் அருகே அரசு பேருந்து மோதி காயத்திரி(25) என்ற இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயத்திரி, மாமனாரை இறக்கிவிட்டு வீடு திரும்பியபோது, மேட்டுப்பாளையம் நோக்கி வந்த அரசு பேருந்து டூ வீலர் பின்புறம் மோதி விபத்து ஏற்பட்டது. பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, விசாரணை நடத்தி வருகின்றனர்.