கோவை: ஏர்போர்ட்டில் 10 விரிவாக்க பணிகள் தொடக்கம்!

கோவை சர்வதேச விமான நிலையத்தை உலகத் தர வசதிகளுடன் மேம்படுத்தும் பல்வேறு புதிய திட்டங்களை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு நேற்று தொடங்கி வைத்தார். விமான நிலைய பாதுகாப்புப் பகுதி விரிவாக்கத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது. அதிவேக வைஃபை, அவ்சர் திட்டம், குழந்தைகள் விளையாட்டு பகுதி, ஃபிளைப்ரரி, மற்றும் உதான் யாத்ரி கஃபே மூலம் ரூ. 10க்கு காபி, சிற்றுண்டிகள் வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டது. அமைச்சர் ராம்மோகன் நாயுடு, விமான நிலையத்தை பொதுமக்கள் தங்கள் சொந்த இடமாக உணரும் வகையில் மாற்றுவதே அரசின் இலக்கு என்றும், கோவை வளர்ந்து வருவதால் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், உலகத் தர வசதிகளுடன் விரைவில் மேலும் மேம்படுத்தப்படும் என்றும் கூறினார். அமைச்சர் எல். முருகன், தமிழகத்தின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றி வருவதாகவும், எம். எல். ஏ வானதி சீனிவாசன், விமான நிலைய விரிவாக்கம் வேகமெடுத்துள்ளதாகவும், எளிய மக்களுக்கும் பயன்படும் வகையில் உணவு வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பது முக்கிய முன்னேற்றம் என்றும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி