கோவை:. 1. 40 கோடியில் புதிய திருத்தேர் - பணிகள் தொடக்கம்

கோவை பேரூர் அருள்மிகு பட்டீஸ்வரர் கோவிலில் ரூ. 1.40 கோடி மதிப்பில் புதிய திருத்தேர் அமைக்கும் பணிக்கான பாலக்கால் பூஜை இன்று நடைபெற்றது. பழைய தேரின் உறுதித்தன்மை குறைந்ததால், பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு புதிய தேர் அமைக்க முடிவு செய்யப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் பூஜை செய்து பணிகளைத் தொடங்கி வைத்தார். அடுத்த ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழாவில் புதிய தேரில் தேரோட்டம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி