கோவையில் நடைபெற்ற பா.ஜ.க மையக்குழு ஆலோசனைக் கூட்டத்தின் போது, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக "Fearless Minds Have No Limits" என்ற வாசகத்துடன் "Army of Dheeran Annamalai" என்ற பெயரில் நகரம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் அண்ணாமலை இருந்தபோதும், அவரது ஆதரவாளர்கள் தங்கள் பலத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.