கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் வகையில் ஜூன் 15ஆம் தேதி பயணிகள் வசதி தின நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விமான நிலைய இயக்குனர் முகமது ஆரிப் கூறுகையில், பயணிகளுக்காக இலவச இணைய வசதி, குறைந்த விலையில் சிற்றுண்டி, எளிதான பயண வசதி, குழந்தைகள் விளையாட்டு பகுதி, நூலகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனால் பயணிகள் எண்ணிக்கை 34 லட்சமாகவும், சரக்கு போக்குவரத்து 15 ஆயிரம் மெட்ரிக் டன்னாகவும் உயர்ந்துள்ளது. நிகழ்ச்சியில் கண் பரிசோதனை, உடல் பரிசோதனை, ரத்த தான முகாம், மரம் நடுதல், வேலைவாய்ப்பு ஆலோசனை வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.