கோவைஅன்னூர் அருகே திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட விவசாயி டிராக்டருடன் பள்ளத்தில் கவிழ்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் திருப்பூரை சேர்ந்த சதீஷ்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். டிராக்டரில் சதீஷ்குமார் சென்ற போது தாங்கமுடியாத அளவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து பள்ளத்தில் விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் ஏற்கனவே உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.