கோவை, இருகூர் தோட்டப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுவதால், அதை பாதுகாப்பாக பிடிப்பது குறித்த ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நேற்று மாலை சூலூர் அருகே உள்ள விச்கோ விடுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவை வன சரகர் திருமுருகன், வனவர் ஜயப்பன், வனக் காவலர் ரங்கசாமி ஆகியோர் சிறுத்தை பிடிப்பு நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர். களப் பணியாளர் சின்ராஜ், இயற்கை, வனவிலங்கு பாதுகாப்பு அறக்கட்டளை செயலாளர் சசிக்குமார் மற்றும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர். சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.