கோவை மாவட்டத்தில் 65 க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றது. இந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஒட்டுநர் மற்றும் முதலுதவி மருத்துவர் என இருவர் உள்ளனர். இவர்களுக்கு 24 மணி நேரமும் பணி என பணி நிர்ணயம் செய்யபட்டு பணியாற்றி வருகின்றனர்.
இதில் முதலுதவி மருத்துவர் பல பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் வாகனங்களை நிறுத்தம் செய்யும் இடங்களில் கழிவறை இல்லாமலும் சரியான ஓய்வறை இல்லாமலும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.