மஹாசிவராத்திரியை முன்னிட்டு புதுச்சேரியில் ஆதியோகி ரத யாத்திரை

புதுச்சேரி:ஈஷா மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, தென்கைலாய பக்திப் பேரவை சார்பில் ‘ஆதியோகி ரத யாத்திரை’ புதுச்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 8 முதல் 10-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. 7 அடி உயர ஆதியோகி திருவுருவம் தாங்கிய ரதம் முக்கிய பகுதிகள் வழியாக பயணிக்கிறது. கோவையில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழா புதுச்சேரியில் நேரலையாக ஒளிபரப்பப்படும். பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி