ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 20 பேர் பலி, 320 பேர் காயம்

ஆப்கானிஸ்தானின் பல்ஹா மாகாணம் மசிர் ஐ ஷெரீப் நகரை மையமாக கொண்டு, இன்று (நவ.03) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவானது. மக்கள் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், இதுவரை 20 பேர் பலியாகி உள்ளதாகவும், 320 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ராணுவ மீட்புக்குழுவினர் சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி