கோவை சிறுமி கொலை சம்பவம்.. கொந்தளித்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்

கோவை சூலூரில் 10 வயது பெண் குழந்தை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த காவல் துறையினருக்கு நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “குற்றத்தை அவன் ஒப்புக்கொண்ட பின் தொலைக்காட்சி சேனல்களில் அதைப்பற்றிய விவாதங்களும், கருத்துக்கூறல்களும் எதற்கு? உடனடியாக களையெடுக்க வேண்டியதுதானே? அப்போதுதானே மற்றவர்களுக்கு பயம் வரும். இவன் போன்ற குற்றவாளிகள் சமுதாயத்திற்கு அவசியமா?” என காட்டம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி