கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கில் கைதான இருவரிடமும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. கைதான கார்த்திக், மோகன் ராஜ் இருவரும் இன்று (ஜூன்.11) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், காவல்துறையின் 819 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அதன் நகல்கள் இருவரிடமும் வழங்கப்பட்டுள்ளது.
நன்றி: IndianExpress