கோவை குண்டுவெடிப்பு: கஸ்டடியில் எடுக்க போலீசார் தீவிரம்

கடந்த 1998ல் நடந்த கோவை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி டெய்லர் ராஜா, கடந்த ஜூலை 10ம் தேதி தமிழ்நாடு பயங்கரவாத தடுப்புப்பிரிவு போலீசாரால் 28 ஆண்டுகளுக்குப்பின் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவரிடம் விசாரணை நடத்த நீதிமன்ற காவல் அனுமதிகேட்டு போலீசார் மனுதாக்கல் செய்தனர். இதனால் விசாரணைக்காக அவர் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 16) ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். பலத்த போலீஸ் பாதுகாப்பு அப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி