ஆசியாவிலேயே அதிக தேங்காய் நார் உற்பத்தி செய்யும் பகுதியாகப் பொள்ளாச்சி விளங்குவதால், தென்னையிலிருந்து குறைந்த சர்க்கரை கொண்ட 'நீரா' பானம் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கவும், பள்ளி மாணவர்களுக்குச் சத்துணவுடன் தேங்காய் கீற்று வழங்கவும் அரசு முன்வர வேண்டும் என கொ.நா.ம.தே.க உறுப்பினர் நித்தியானந்தன் சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.