தேங்காய் பாலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. தேங்காய் பாலை தலையில் தடவினால் கூந்தல் பளபளப்பாகும். மேலும், வெள்ளை முடி கருப்பாக மாறும். 1 கப் தேங்காய் பாலில் 2 டேபிள் ஸ்பூன் செம்பருத்தி பொடி கலந்து தலையில் தடவி வந்தால் சில நாட்களில் வெள்ளை முடி கருப்பாக மாறும். தேங்காய் பாலில் கற்றாழையை கலந்து, தலைமுடியில் 20 நிமிடங்கள் தடவி சீயக்காய் போட்டு தலைகுளித்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.