சமூக வலைதள மீம்கள் மூலம் தொடங்கப்பட்ட காக்ரோச் ஜனதா கட்சி (கரப்பான்பூச்சி ஜனதா கட்சி) கூட ஊடக சந்திப்பை நடத்திவிட்டதாகவும், ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்னும் செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்றும் விமர்சனம் எழுந்துள்ளது. ஊடகங்களை சந்திக்காமல் விஜய் புறக்கணிப்பது அவரது அச்சத்தை காட்டுவதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.