கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் உள்ள ஒரு ஹோட்டலில் வாங்கிய அசைவ உணவில் கரப்பான் பூச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பார்சலாக உணவை வாங்கிச் சென்ற வாடிக்கையாளர், வீட்டில் திறந்து பார்த்தபோது உணவுக்குள் கரப்பான் பூச்சி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. சம்பவம் உணவகங்களின் சுகாதாரத் தரம் குறித்து பொதுமக்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.