கூட்டணி பேச்சுவார்த்தை சிறப்பாக நடந்து வருகிறது என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் இன்று (பிப்., 05) செய்தியாளர்களை சந்தித்த அவர், 'தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அனைத்து மக்களும் நன்றாக வாழக்கூடிய, ஊழல் மற்றும் கனிம வளக் கொள்ளை இல்லாத, அரசுப் பணியிடங்களுக்கு பணம் பெறாத ஆட்சி அமைய வேண்டும். புதிய தமிழகம் கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சிக்கு வரும்' என தெரிவித்தார்.