திமுக கூட்டணியில் இருந்தபோது மாதம் ஒருமுறை ஸ்டாலினுடன் மேடை ஏறிய தோழமைக் கட்சித் தலைவர்கள், ம.ச.வெ கூட்டணியில் முதல்வர் விஜய்யைப் பார்க்கவே முடியாமல் தவித்து வருகின்றனர். கடந்த 1-ம் தேதி மதுராந்தகத்தில் வைகோ, திருமாவளவன், மாணிக்கம் தாகூர் ஆகியோர் பங்கேற்ற பொதுக்கூட்டம் கூட்டமின்றி பிசுபிசுத்தது. தொண்டர்கள் கலைந்து சென்றதால் அதிருப்தியடைந்த தலைவர்கள், ஒருங்கிணைப்புக் குறைபாடு குறித்துப் புலம்பினர். ஆனால் முதல்வர் இதுபற்றிக் கவலைப்படவில்லை எனத் தெரிகிறது.