கூட்டணி ஆட்சி.. அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த ஆர்.பி. உதயகுமார்

பாஜக பொதுக்குழு உறுப்பினரான அண்ணாமலை, “2026ஆம் ஆண்டில் கூட்டணி ஆட்சி என நான் சொல்ல மாட்டேன். நான் பாஜக ஆட்சி என்று தான் சொல்வேன். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி வர வேண்டும் என்பதே எனது விருப்பம்” என தெரிவித்திருந்தார். இந்நிலையில், “சிலர் இருப்பிடத்தை தக்கவைத்துக் கொள்ள சொல்லும் கருத்துகளை கவனத்தில் கொள்ள வேண்டாம்” என அண்ணாமலை பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி