மத்திய அரசின் 'பிஎம்ஸ்ரீ' திட்டத்தைத் தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசும் உறுதியுடன் நிராகரிக்க வேண்டும் என்று சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இத்திட்டம் இந்துத்துவ கருத்தியலையும், சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழித் திணிப்பையும் உள்ளடக்கமாகக் கொண்டது என்பதால், தமிழ்நாடு அரசு ஆரம்பத்தில் இருந்தே இதனை எதிர்த்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், புதிய அரசும் இதற்கு இடம் தரக்கூடாது எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.