முதலமைச்சர் விஜயின் சாலிகிராமம் வீட்டை இடித்து வருவது வேதனை அளிப்பதாக நடிகர் குட்டிப்புலி சரவணன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில், விஜய் குழந்தையாக வளர்ந்த அந்த வீட்டை நினைவுச் சின்னமாக பாதுகாத்திருக்கலாம் என்றார். மேலும், அந்த வீட்டில் இருந்த நாயுடன் விளையாடியபோது தனது காதை அது கடித்த சம்பவத்தையும் நினைவுகூர்ந்து, அந்த வீட்டுடன் தனக்கும் பல மறக்க முடியாத நினைவுகள் இருப்பதாக கூறினார்.
நன்றி: provoke