பள்ளி, கல்லூரிகளில் முதல்வர் விஜய் பிறந்தநாளைக் கொண்டாடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கல்வி நிறுவனங்களில் அரசியல் நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கும் விதிகளைத் தமிழக அரசு கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டனர். மேலும், இது தொடர்பாக விரிவான விசாரணை கோரிய மனுவுக்கு அரசு பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நன்றி: நியூஸ் தமிழ்