மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரையின்போது, பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த முதலமைச்சர் விஜய், குழந்தை ஒன்றுக்கு பெயர் சூட்டினார். அப்போது பெற்றோர் குழந்தையை விஜயிடம் அழைத்து வந்த நிலையில், குழந்தைக்கு ‘யாழ் நிலா’ என அவர் பெயர் வைத்தார். குழந்தையை கையில் ஏந்தி அன்புடன் வாழ்த்திய விஜய், பெற்றோரிடமும் சிறிது நேரம் உரையாடினார். இதனைத் தொடர்ந்து அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.