மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவைத்த பின், சின்னக்காவூர் கிராமத்தில் விவசாய குடும்பங்களை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தார். அப்போது அங்கிருந்த மூதாட்டி ஒருவருக்குத் தான் அணிந்திருந்த விலைமதிப்பற்ற 'கிறிஸ்டியன் டியோர்' (Christian Dior) கூலிங் கிளாஸைப் பரிசளித்து அணிவித்தார். இதன் மதிப்பு சந்தையில் சுமார் ரூ.30,000 முதல் ரூ.1.50 லட்சம் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.