சேலம் மேட்டூர் அணையிலிருந்து 80 நாட்களுக்குப் பிறகு இன்று (செப்., 1) காலை டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. போதிய நீர் இருப்பு இல்லாததால், வழக்கமாக ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும் தண்ணீர் திறக்கப்படவில்லை. நேற்று முன்தினம் 9,035 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 11,501 கனஅடியாக அதிகரித்தது. நீர்மட்டம் 91.15 அடியாக உயர்ந்துள்ளது. முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று காலை 11 மணிக்கு சேலம் வந்து, பகல் 12 மணிக்கு மேட்டூர் அணையில் பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விடுகிறார்.