கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடை மீண்டும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை கண்டித்து அப்பகுதியினர் இன்று (மே 29) போராட்டத்தில் ஈடுபட்டனர். தவெக அரசு ஆட்சியமைந்த சில நாட்களிலேயே தமிழகம் முழுவதும் சுமார் 717 மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஒரு சில கடைகளை மூடுவதில் இழுபறி நீடிக்கிறது. மூடப்படும் பட்டியலில் இடம்பெற்ற மதுக்கடையை மீண்டும் தற்போது திறந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.