கீழடியில் 11-ம் கட்ட அகழாய்வில் சுடுமண் குழாய்கள் கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 11-ம் கட்ட அகழாய்வில், ஒரே குழியில் இருவேறு வடிவிலான சுடுமண் குழாய்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கஜேந்திரன் என்பவரது நிலத்தில் தோண்டப்பட்ட குழிகளில் ஏற்கனவே செங்கல் கட்டுமானம், சாய கிண்ணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கண்டறியப்பட்ட நிலையில், இந்த புதிய கண்டுபிடிப்புகள் தொல் தமிழர்களின் நீர் மேலாண்மை திறனை உணர்த்துகின்றன.

தொடர்புடைய செய்தி