‘ஜனநாயகன்’ பேனர் வைப்பதில் தவெக நிர்வாகிகள் இடையே மோதல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு பேனர் வைப்பதில் தவெக நிர்வாகிகளிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. விளம்பர பேனரில் தனது புகைப்படம் இடம்பெறவில்லை எனக்கூறி நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், பின்னர் கைகலப்பாக மாறியது. இந்த தகராறில் காயமடைந்த தவெக மாவட்ட செயலாளர் சத்யா, உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நன்றி:SunNews

தொடர்புடைய செய்தி