தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்தியபாமா மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்த் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்த நிலையில், அங்கு திரண்ட அதிமுகவினர் "துரோகி" என தொடர்ச்சியாக முழக்கமிட்டு வாகனங்களை சிறைபிடித்தனர். இதனால் இரு தரப்பு தொண்டர்களிடையே கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டு, அப்பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவியது. இதனால் அமைச்சர்கள் காரை விட்டு வெளியே வராமல் காத்திருந்ததுடன், இறுதியில் பரப்புரையை மேற்கொள்ளாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
நன்றி:SunNews