ஏமனில் இயங்கி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை 'பயங்கரவாதிகள்' என்று சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் சாடியுள்ளார். ஜித்தாவில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேசிய அவர், புனித நகரான மெக்காவை குறிவைத்து ஹவுதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் முயற்சிகள் உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களை தூண்டும் செயலாகும் என கண்டித்தார். மெக்காவை நோக்கி வீசப்பட்ட ஏவுகணைகளை நடுவானில் சுட்டு வீழ்த்தி தாக்குதலை முறியடித்த சவுதி வான் பாதுகாப்பு படையினருக்குத் தனது பாராட்டுகளையும் அவர் தெரிவித்தார்.